மலைக்கிராம மாணவ - மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் மலைக்கிராம மாணவ - மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Update: 2024-02-20 12:32 GMT
ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், கெத்தேசால் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் கெத்தேசால் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் 30 மாணவ, மாணவிகளும், கெத்தேசால் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் 39 மாணவ, மாணவிகளும் தங்கியுள்ளனர். மேற்கண்ட விடுகளில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா திடீர் தணிக்கை மேற்கொண்டு, விடுதிகளில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், விடுதிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் உணவு பொருட்களின் இருப்பு ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விடுதியினை தூய்மையாக பராமரிக்க விடுதி காப்பாளர்களிடம் அறிவுறுத்தினார். மேலும், மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார்.