கிராம சாலை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்க வளாகத்தில் மாவட்ட வளா்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-29 05:01 GMT

கண்காணிப்புக் குழு கூட்டம் 

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்க வளாகத்தில் மாவட்ட வளா்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் த.பிரபு சங்கா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.ஜே. கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), துரை சந்திரசேகா்(பொன்னேரி) ஆகியோா் வரவேற்றனா். திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் கே.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். அப்போது, மாவட்டத்தில் மத்திய, மாநில அரசால் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில், ஒருங்கிணைந்த வேளாண் திட்டப் பணிகள் வளா்ச்சி குறித்தும், மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி உணவு பதப்படுத்துதல் குழு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம், சமூகநலத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டம், புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் சத்துணவு திட்டம் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதையடுத்து தற்போது நடைபெற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) என்.ஒ.சுகபுத்ரா, பொன்னேரி சாா்-ஆட்சியா் வாகே சங்கேத் பல்வந்த், ஆவடி மாநகராட்சி ஆணையா் ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், திருவள்ளூா் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் உமா மகேஸ்வரி, அரசு அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Tags:    

Similar News