பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் திடீர் ஆய்வு
சேலம் பாராளுமன்ற எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை மாவட்ட மேற்பார்வையாளர் பட்டேல் ஆய்வு செய்தார்.
எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பதட்டமான வாக்குச்சாவடி மையங்களை சேலம் மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் பட்டேல் நேரில் பார்வையிட்டார். 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதட்டமான வாக்குச்சாவடிகளான போடிநாயக்கன்பட்டி,ஆலச்சம்பாளையம் செட்டிமாங்குறிச்சி, எடப்பாடி நகர பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை சேலம் மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் பட்டேல் நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் பொதுமக்கள் பதட்டமின்றி வாக்களிக்கும் வகையிலும் பாதுகாப்பு குறித்த முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது ஊனமுற்றோர் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதனை வாக்குப்பதிவு குழுவினர் எடப்பாடி அருகே மொட்டையன் தெரு பகுதியில் உள்ள மனம் நலம் பாதித்த பெண் வீட்டிற்கு சென்று தபால் வாக்கு பதிவு பெறப்பட்டது.
இதனை மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் பட்டேல் நேரில் பார்வையிட்டார். அப்போது எடப்பாடி வட்டாட்சியர் வைத்தியலிங்கம் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.