ட்ரோன்கள் பறக்க தடை விதித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மைய பகுதிகள் ஜூன் நான்காம் தேதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் எஸ்பி பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-04-29 03:23 GMT

 எஸ்பி பெரோஸ் கான் அப்துல்லா

விருதுநகர் எஸ்பி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மக்களவை பொதுத் தேர்தல் 2024 விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினருக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19.4. 2024 அன்று சிறப்பாக நடந்து முடிந்து வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையமான வி வி வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் 19. 4. 2024 இரவு முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மத்திய ஆயுதப்படை தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்களுடன் கூடிய மூன்றடுக்கு பாதுகாப்பு சுழற்சி முறையில் அளிக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்தை பாதுகாத்து வருகிறார்கள்

. மேலும் 4.6. 2024 அன்று வரை வாக்கு எண்ணிக்கை மையம் உள்ள மேற்படி பகுதிகளில் தற்காலிகமாக சிவப்பு மண்டலமாக அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட இடங்களில் ஆளில்லா விமானங்கள் ட்ரோன் பறக்க விட தடை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News