வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திடீர் ஆய்வு
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ ஆய்வு மேற்கொண்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-10-20 14:51 GMT
வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் முறையாக பேருந்துகள் தனக்குரிய ரேங்கில் நிற்பதில்லை. மதுரை பேருந்தில் வண்டி கிளம்பிய பின்பே கொடை ரோடு , வாடிப்பட்டி செல்ல பயணிகள் ஏற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முறையாக ரேங்கில் நிற்காத பேருந்து ஒட்டுனர்களை எச்சரிக்கை செய்து அனைத்து பயணிகள் ஏறி செல்ல அறிவுறுத்தினர்.