தூய்மை பணியாளர்களுக்குத் தீபாவளி பரிசு வழங்கிய அதிமுக எம்.பி

Update: 2023-11-13 04:08 GMT

தீபாவளி பரிசு வழங்கிய அதிமுக எம்.பி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம்,மேட்டூர், சின்ன பார்க் அதிமுக அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், அரசு மருத்துவமனை சுகாதார பணியாளர்கள் என 500 நபர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி  அறிவுறுத்தலின்படி மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து  இனிப்பு மற்றும் ரொக்கம் பரிசை  வழங்கினார். மேலும் தூய்மை பணியாளர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Tags:    

Similar News