தீபாவளி : சென்னையிலிருந்து தி.மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Update: 2023-11-07 02:43 GMT
சிறப்பு பேருந்துகள் இயக்கம் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்படுவதால் அதனையொட்டி வருகிற 09 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை பொது மக்கள் வசதிக்காக தாம்பரம் இரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை மற்றும் போளுருக்கு செல்லத் தினசரி 100 பேருந்துகளும், பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து ஆரணி மற்றும் செய்யாறுக்கு 10 பேருந்துகளும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருவண்ணாமலை மண்டலம் மூலம் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படவுள்ளது. மேலும் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப திருவண்ணாமலையிலிருந்து 70 பேருந்துகளும், போளுரிலிருந்து 10 பேருந்துகளும், ஆரணியிலிருந்து 10 பேருந்துகளும் செய்யாறிலிருந்து 5 பேருந்துகளும் வருகிற 13 முதல் 14 ஆம் தேதி வரை தினசரி சென்னைக்கு இயக்கப்படவுள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் (விழுப்புரம்) தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News