விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு தேமுதிகவினர் அஞ்சலி

ஊத்தங்கரையில் தேமுதிகவினர் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

Update: 2023-12-28 13:27 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனைசந்திப்பில் உள்ள அண்ணா சிலை பகுதியில் உடல் நலக்குறைவால் காலமான தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவர்களுக்கு பேனர் வைத்து தேமுதிக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவர்கள் சிகிச்சை பலனின்றி மறைந்தார். தமிழ்திரை உலகில் "இனிக்கும் இளமை" என்ற படத்தில் அறிமுகமாகி 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, தனக்கான அடித்தளத்தை மிக உறுதியாக அமைத்துக்கொண்டதோடு, படிப்படியாக முன்னேறி மிகச்சிறந்த நடிகர் – தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் – தேமுதிக நிறுவனர் - சட்டமன்ற உறுப்பினர் – எதிர்கட்சித்தலைவர் என உயர்ந்தவர் விஜயகாந்த் அவர்கள். மிக எளிமையாக அனைவரிடமும் பழகக்கூடிய பண்பாளர்.

திரைத்துறையில் நடிகர்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும்-வளர்ச்சியையும் உயர்த்தியவர் விஜயகாந்த். அரசியல் பொதுவாழ்வில் பல்வேறு எதிர்ப்புக்களை எதிர்கொண்டு, இறுதிவரை மக்கள் நலனுக்காகவே வாழ்ந்து மறைந்தவர். தமிழக அரசியல் களத்தில் ஆளுமைமிக்க அரசியல்வாதியாக இருந்தவர். அவரது பெருமைகள், சாதனைகள் மற்றும் அவரின் மனிதநேயம் என்றென்றும் இப்பூவுலகில் நிலைத்து நிற்கும். விஜயகாந்த் அவர்களை இழந்துவாடும், அவரின் குடும்பத்தாருக்கும் – உறவினர்களுக்கும் – திரையுலக நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் ஊத்தங்கரை தேமுதிக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும்போது பேருந்துக்காக காத்திருந்த கொட்டு காரன் பட்டி கிராமத்து மூதாட்டி ஜானகி விஜயகாந்தின் இறப்புச் செய்தி அறிந்து அங்கேயே கதறி கதறி அழுந்தார், கிராம பாணியில் விஜயகாந்த் அவர்களை புகழாரம் சூட்டி பாட்டுப்பாடி கதறி கதறி அழுதார் இவற்றைக் கண்ட அவரது ரசிகர்கள் நெஞ்சம் பதறி அழுதவாறு அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தனர் சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News