கோவில் விழாவில் திமுக - அதிமுக வாக்குவாதம்
எடப்பாடி ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நடந்த திருக்கல்யாண வைபவத்தின் போது அதிமுக,திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அருள்மிகு தேவகிரி அம்பாள் உடனமர் அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் சித்திரை தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம், இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் வெகு விமர்சையாக நடைபெற்றது. சேலம் மாவட்டம் எடப்பாடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர்-தேவகிரி அம்மன் திருக்கல்யாண வைபவத்தை காண ஏராளமான பெண்கள் கோயில் நிர்வாக குழு மற்றும் அதிமுக, திமுக பிரிவினர் அமர்ந்திருந்தனர். அப்போது கோயில் நிர்வாக குழு பொறுப்பாளர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் திமுகவினருக்கு சால்வை அணிவித்தார்.
அப்போது அதிமுகவினர் ஒருவர் எழுந்து நின்று கோவிலில் அரசியல் செய்ய வேண்டாம் என கூறியதால் இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது அங்கு இருந்த காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமாதனம் செய்து வைத்தனர். இதனால் கோவிலில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மணமேடையில், பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் -தேவகிரி அம்மனுக்கு மலர் அலங்காரத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்
திருக்கல்யாணத்தில் எடப்பாடி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.