நாங்கதான் செஞ்சோம்... நகர்மன்ற கூட்டத்தில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., காரசாரம்!

குமாரபாளையம் நகர மன்ற கூட்டத்தில் திமுக செய்த திட்டங்களை, அதிமுகவினர்கள் தாங்கள் செய்த திட்டம் என்று கூறியதால் காரசார வாக்குவாதம்

Update: 2023-12-01 12:57 GMT

நகர்மன்ற கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி 33 வார்டுகளை கொண்டு நகராட்சியாகும் நகராட்சியில் சாதாரண மாதாந்திர கூட்டம் இன்று நகர மன்ற தலைவர் விஜய கண்ணன் தலைமையில் நகராட்சி ஆணையாளர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் சாக்கடை கால்வாயில் தூர்வார்படாமல் இருப்பதாகவும் மழைக்காலம் என்பதால் மழை நீர் தேங்கி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதால் சாக்கடைகள் தூர் வரவேண்டும். குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லை என்றால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற துணை தலைவர் வெங்கடேசன் கடந்த 20 வருடங்களாக தார் சாலை அமைக்கப்படாமல் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வந்த சூழ்நிலையில் நகர மன்ற தலைவரின் சீரிய முயற்சியால் தற்பொழுது சாலை அமைக்கும் பணிக்காக சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார். அப்பொழுது அதிமுக நகர்மன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணி குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணியின் சீரிய முயற்சியாலேயே இந்த அமைக்கப்படுவதாகவும், அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதற்கு இந்த சாலை கடந்த 20 ஆண்டுகளாக போடப்படாமல் இருந்து வந்ததாகவும் கடந்த 20 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராகவும் 10 ஆண்டுகளாக அமைச்சராகவும் இருந்த குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரமான தங்கமணி கண்டு கொள்ளாமல் இருந்த சூழ்நிலையில், தற்பொழுது திமுக நகரமன்ற உறுப்பினர்களும் நகர மன்ற தலைவரும் அமைச்சர்களை சந்தித்து அதிகாரிகளையும் சந்தித்து நிதி ஒதுக்கீடு செய்து தற்பொழுது நடைபெறும் பணி அதிமுகவினரால் நடைபெறும் திட்டம் என்று கூறுவது அபத்தமான பொய். தவறான தகவல்களை நகராட்சியில் பதிவு செய்யக்கூடாது எனவும் இதற்கான ஆதாரங்கள் இருந்தால் காட்டவும் ஏற்பட்டது இதற்கிடையே நகர மன்ற கூட்டம் நிறைவடைந்ததாக கூறி நகரம் என்ற தலைவர் கூட்டத்தை கலைத்தார் அதிமுக திமுக உறுப்பினர்களின் கடுமையான வாக்குவாதத்தால் நகராட்சி வளாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News