திமுக வேட்பாளர் பிரச்சாரம்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 150 நாட்கள் வேலை வழங்கப்படும் என கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன் தெரிவித்தார்.

Update: 2024-04-06 07:36 GMT

பிரச்சாரம்

ரிஷிவந்தியம் சட்டசபைக்குட்பட்ட பகண்டைகூட்ரோட்டில், அவர் பேசியதாவது: தாயுள்ளம் கொண்ட முதல்வர் ஸ்டாலின் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். பல்வேறு மாநிலங்கள், முதல்வர் ஸ்டாலினின் திட்டத்தை பின்பற்றுகின்றன. வாணாபுரத்தை தாலுகாவாக தரம் உயர்த்தியது, சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய், பஸ் நிழற்குடை அமைத்தல் என பல்வேறு பணிகள் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பா.ஜ., ஆட்சியில் தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் மக்களுக்கு பணி சரியாக வழங்கப்படவில்லை. மத்தியில் காங்., ஆட்சி அமைந்தால், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி, 400 ரூபாய் சம்பளம் தருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே, விவசாய குடும்பத்தை சேர்ந்த எனக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு வேட்பாளர் மலையசரன் பேசினார்.

Tags:    

Similar News