மேட்டூரில் திமுக வேட்பாளர் மணி வாக்கு சேகரிப்பு !
சேலம் மாவட்டம், மேட்டூரில் திமுக வேட்பாளர் மணி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
மேட்டூரில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு திமுக வேட்பாளர்கள் தமிழகத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் செய்து வருகின்றனர்.அதன்படி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மணி மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார்.
ஆர். எஸ். பேருந்து நிறுத்தம், தங்கமாம்புரிபட்டினம், சேலம் கேம்ப், மேட்டூர், கொளத்தூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் திறந்தவெளி வாகனம் மூலமும் ,நடந்து சென்றும் பொது மக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது நகர செயலாளர் காசி விஸ்வநாதர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபால், ஒன்றிய செயலாளர் அர்த்தநாரீஸ்வரன்,பேரூர் செயலாளர் குமார் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.