பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு !

கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு எந்த திட்டமும் தராத அதிமுக அரசு ஆனைமலை நல்லாறு  திட்டத்தை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை விவசாயிகளின் பாதுகாவலனாக இருக்கும் திமுக அரசால் மட்டுமே ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்ற முடியும் பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வாக்கு சேகரிப்பில் பேச்சு.

Update: 2024-04-11 06:45 GMT

திமுக 

கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு எந்த திட்டமும் தராத அதிமுக அரசு ஆனைமலை நல்லாறு  திட்டத்தை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை விவசாயிகளின் பாதுகாவலனாக இருக்கும் திமுக அரசால் மட்டுமே ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்ற முடியும் பொள்ளாச்சி மக்களவைத் தேர்தல் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வாக்கு சேகரிப்பில் பேச்சு. பொள்ளாச்சி ஏப்ரல் 11 பொள்ளாச்சி மக்களவை திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி இன்று வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட நல்லூர் , போடிபாளையம் , இராசிசெட்டிபாளையம் , முத்தூர் உள்ளிட்ட பகுதியில் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி துண்டு பிரசுரங்கள் வழங்கியும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது அப்பகுதி மக்கள் ஆராத்தி எடுத்து பூரணகும்ப மரியாதை  கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர் இதை தொடர்ந்து பேசியவர் விவசாயிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு திட்டமும் தராத அரசு அதிமுக அரசு கடந்த காலங்களில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்தனர் அது போராட்டமாக மாறியது போராட்டம் நீதிமன்றம் சென்ற விவசாயிகள் விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று வழக்கு தொடர்ந்தவர் எடப்பாடியார்  விவசாயிகளுக்கு எந்த திட்டமும் தராத அரசு ஆனைமலை நல்லாறு பற்றி பேச எந்த தகுதியும் எடப்பாடி பழனிச்சாமி இல்லை விவசாயிகளின் பாதுகாவலனாக திமுக அரசு உள்ளது விவசாய கடன் தள்ளுபடி, நில வரி தள்ளுபடி , 7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி கடந்த மூன்று ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கிய அரசு நமது தமிழக அரசு ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்ற திமுக அரசால் மட்டும் முடியும் என பிரச்சாரத்தின் போது கூறினார்.ம.சக்திவேல்.பொள்ளாச்சி 9976761649.
Tags:    

Similar News