மக்கள் கேட்கும் கேள்வியால் தினறும் திமுக வேட்பாளர்கள்: அர்ஜூன் சம்பத்

இந்து மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான அர்ஜுன் சம்பத் காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்கப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-04-02 15:30 GMT

வாக்கு சேகரித்த அர்ஜூன் சம்பத் 

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பாமகவை சேர்ந்த ஜோதி வெங்கடேசன் என்பவர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இந்து மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான அர்ஜுன் சம்பத் இன்று காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்கப்பில் ஈடுபட்டார்.

இதற்கு முன்பாக செய்தியாளர்கள் சந்தித்த அர்ஜுன் சம்பத் , மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற வாசகத்துடன் இந்த நாடாளுமன்ற தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி சந்திப்பதாகவும் , அதன் சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் போட்டியிடுவதாகும் அவரை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கடந்த ஆண்டுகளில் பாமக வேட்பாளராக வெற்றி பெற்ற மூர்த்தி காஞ்சிபுரத்தில் ரயில் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை மேற்கொண்டு தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு பெரிதும் உதவி வருகின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக வேட்பாளர் செல்வம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் எந்தவித பயன்களும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு இல்லை. எந்தவித ரயில் திட்டங்களையும் புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு எடுத்து வரவில்லை , அதிக தூரம் பயணிக்கும் பாலாறில் எந்தவித தடுப்பணையும் இல்லாததால் காஞ்சிபுர சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சினையும் உள்ளது.

விவசாய மாவட்டம் நெசவாளர் மாவட்டம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் இவர்களால் எந்த வித பயனும் கடந்த ஐந்தாண்டுகளாக இல்லை என்பதும் இனிவரும் காலங்களிலும் செய்ய மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். தற்போது திமுக வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் மேற்கொள்ளும் நிலையில் அவர்களுக்கு எதிராக மக்கள் கேள்வி கேட்க துவங்கிவிட்டனர். கடந்த 30 மாதங்களில் வரி உயர்வு சட்டம் ஒழுங்கு பிரச்சனை என பல்வேறு நிலைகளில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்தும் தற்போது மக்கள் விழித்துக் கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டது என தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மகேஷ் குமார், தலைவர் உமாபதி, இந்து மக்கள் கட்சி துணைப் பொது செயலாளர் முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News