திமுக நிர்வாகிகளிடம் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு...

பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் சி என் அண்ணாதுரை செங்கம் மற்றும் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் உள்ள நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-03-24 05:26 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதிக்கு உட்பட்ட தண்டராம்பட்டு மத்தியம் மற்றும் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை செயலாளருமான மு.பெ.கிரி அவர்கள் முன்னிலையில் ஒன்றிய நகர நிர்வாகிகள் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்று வாக்கு சேகரித்தார்.

இதனைத் தொடர்ந்து செங்கம் கிழக்கு ஒன்றியம் மேற்கு ஒன்றியம் மத்திய ஒன்றியம் மற்றும் நகர நிர்வாகிகளை பெங்களூர் சாலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்றைய நகர மாவட்ட நிர்வாகிகள் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக மூத்த முன்னோடிகள் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து சால்வனுக்கு மரியாதை செலுத்திய பின்னர் நிர்வாகிகளிடம் வாக்கு சேகரித்தார். இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில் இந்தியா கூட்டணி கொள்கை கூட்டணியாகவும் அடிதட்டு மக்கள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான ஒரு கூட்டணியாகவும் ஏழை எளிய மக்கள் சிறு குறு தொழில் செய்பவர்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கான ஒரு கூட்டணியாகவும் ஆண்டு காலமாக ஒன்றிய அரசால் பல்வேறு நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கக்கூடிய ஒரு கூட்டணியாக உள்ளது இந்த கூட்டணியை திமுக சார்பில் சி என் அண்ணாதுரை ஆகிய என்னை நிறுத்தியுள்ளனர்.

பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றால் தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றி பெற்றதாகவும் அவருடைய கொள்கைகள் வெற்றி பெற்றதாகவும் பேரறிஞர் அண்ணா தந்தை பெரியார் முத்தமிழர் கலைஞர் ஆகியாரின் எண்ணங்களை நிறைவேற்றக் கூடிய ஒரு வெற்றி எனவும் திமுகவின் ஒவ்வொரு தொண்டனும் வெற்றி வெற்றி பெற்றதாக கருதப்படுகிறது. இந்தியாவின் தலை சிறந்த முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை ஒவ்வொரு நபரிடம் நிலைக்கு திமுகவின் தேர்தல் அறிக்கையில் விலைக்கு வாக்கு சேகரித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளரும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம், ரமேஷ்,சிவசேமன், ஏழுமலை செந்தில்குமார், மனோகரன், நகர செயலாளர் அன்பழகன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News