திமுக மாநாடு: திருச்சியில் போக்குவரத்து மாற்றம்
திருச்சியில் அனைத்து கனரக, இலகுரக வாகனங்கள் செல்லவேண்டிய வழித்தடங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்....திருச்சிbமாவட்டம். சிறுகனூரில் நாளை (22.03.2024) திருச்சி மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் தமிழ்நாடு முதல்வர் வருகையை முன்னிட்டு,
கீழ்க்கண்டவாறு போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. அதன் படி 22. தேதி மதியம் 14:00 மணியிலிருந்து அத்தியாவசிய பொருட்கள், அவசர தேவை வாகனங்கள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற, அனைத்து கனரக வாகனங்கள் சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும்,
அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, வையம்பட்டி வழியாக செல்ல வேண்டும். சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும், அனைத்து கனரக வாகனங்களும்,
பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, புத்தாநத்தம், துவரங்குறிச்சி வழியாக செல்ல வேண்டும். மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், விராலிமலை வழியாக மணப்பாறை, குளித்தலை, முசிறி,
துறையூர், பெரம்பலுார் வழியாக செல்ல வேண்டும். சென்னையிலிருந்து கரூர் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, கரூர் சென்று வரவேண்டும்.
கரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், கீழப்பழூர், திருமானூர், திருவையாறு வழியாக தஞ்சாவூர் சென்று வரவேண்டும். சேலத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் மைக்கேல்நாயக்கன்பட்டி, தொட்டியம், முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலுார், கீழப்பழுர், திருமானூர்,
திருவையாறு வழியாக தஞ்சாவூர் சென்று வரவேண்டும். சென்னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும், அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலுார் மாவட்டம் பெரம்பலுார் பைபாஸ் ரோடு வழியாக குன்னம், அரியலுார், கீழப்பழுர், புள்ளம்பாடி, கொள்ளிடம் "Y" ரோடு, திருச்சி பால்பண்ணை, திருவெறும்பூர், துவாக்குடி ரிங்க் ரோடு, கும்பங்குடி ஜங்சன், கீரனூர் வழியாக சென்று வரவேண்டும். தஞ்சாவூரிலிருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் துவாக்குடி டோல்பிளாசா, துவாக்குடி ரிங் ரோடு, பஞ்சப்பூர், மதுரைரோடு,
விராலிமலை, வளநாடு கைக்காட்டி, துவரங்குறிச்சி வழியாக சென்று வரவேண்டும். தஞ்சாவூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் துவாக்குடி டோல்பிளாசா, துவாக்குடி ரிங் ரோடு, பஞ்சப்பூர், மதுரைரோடு, விராலிமலை, மணப்பாறை ரோடு. மணப்பாறை அரசுமருத்துவமணை, வையம்பட்டி வழியாக சென்று வரவேண்டும். சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், பாடாலுார், தச்சங்குறிச்சி, பூவாளுர்,
கொள்ளிடம் "Y" ரோடு, திருச்சி வழியாக செல்ல வேண்டும். சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், பாடாலூர், தச்சங்குறிச்சி, பூவாளுர், கொள்ளிடம் "Y" ரோடு, திருச்சி வழியாக செல்ல வேண்டும்.
மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகளங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், கொள்ளிடம் "Y" ரோட்டில் திருப்பிவிடப்பட்டு, நொச்சியம், மண்ணச்சநல்லுார், துறையூர், பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும். திண்டுக்கலிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக
வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், கொள்ளிடம் "Y" ரோட்டில் திருப்பிவிடப்பட்டு, நொச்சியம், மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலுார் வழியாக செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது