முதல்வருக்கு நன்றி தெரிவித்த திமுக மாவட்ட செயலாளர்

பென்னாகரம் தொகுதியில் சிறு விளையாட்டரங்கம் அளித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து திமுக செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-06-29 08:05 GMT

பென்னாகரம் தொகுதியில் சிறு விளையாட்டரங்கம் அளித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து திமுக செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்ரமணி இன்று காலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆரோக்கியமான வாழ்வு வாழ விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கலாசாரத்தை வளர்த்தெடுக்கும் வண்ணம் தமிழக முதல்வரின் மினி ஸ்டேடியம் திட்டத்தின் கீழ் தருமபுரி கிழக்கு மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி சிறு விளையாட்டு அரங்கம் அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் - கழக தலைவர் அவர்களுக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் M.R.K.பன்னீர்செல்வம் Bsc.,BL., ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News