பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது.;
Update: 2024-03-27 11:14 GMT
ஆலோசனைக் கூட்டம்
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி முன்னாள் எம்எல்ஏ தலைமையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏரியூர் பகுதியில், ஏரியூர் ஒன்றிய கழக செயலாளர் ஏரியூர் செல்வராஜ் முன்னிலையில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆ.மணி, பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் ஒன்றிய தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் முன்னாள் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இன்பசேகரன் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு தலைவர்கள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் கிளை செயலாளர்கள், BLA2,BLC ஆகியோர் கலந்து கொண்டனர்.