பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய திமுக நிர்வாகிகள்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 7 வது வார்டு பகுதியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று திமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர்.
Update: 2024-03-20 08:16 GMT
வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ந்தேதி தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அனைத்து கட்சியினரும் பரபரப்பாக பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 7 வது வார்டு பொதுமக்களிடம் மண்ணச்சநல்லூர் நகர திமுக நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.