ஆவுடையானூர் பகுதியில் திமுக திண்ணைப் பிரச்சாரம்
ஆவுடையானூர் பகுதியில் திமுக திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது
தென்காசி தெற்கு மாவட்டம் கீழப்பாவூர் அருகே ஆவுடையானூர் ஊராட்சிக் குட்பட்ட சாலடியூரில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனித் துரை தலைமை தாங்கி னார். யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை, மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ. சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திண்ணைப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து, முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் இரண்டரை ஆண்டு கால சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வழங்கினார். மேலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் குறும்பலாப் பேரி டால்டன், வளர்மதி ராஜன், பாண்டியன், ராமர், கலைச்செல்வன், கிருஷ்ண மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்