பாஜ., கூறும் திட்டங்களை கடந்த 2006லேயே திமுக., செய்துவிட்டது

பாஜ., தற்போது விளம்பரப்படுத்தும் செயல் திட்டங்களை கடந்த 2006ம் ஆண்டே திமுக நிறைவேற்றியுள்ளது என அமைச்சர் அன்பரசன் உத்திரமேரூர் நடந்த விழாவில் கூறினார்.

Update: 2024-02-07 15:53 GMT

பாஜ., தற்போது விளம்பரப்படுத்தும் செயல் திட்டங்களை கடந்த 2006ம் ஆண்டே திமுக நிறைவேற்றியுள்ளது என அமைச்சர் அன்பரசன் உத்திரமேரூர் நடந்த விழாவில் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உத்திரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மாபெரும் பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் கலந்து கொண்டு உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களை சேர்ந்த 2249 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

அமைச்சர் அன்பரசன் விழா பேருரையாற்றிய போது, மத்திய பாஜக அரசு கடந்த சில நாட்களாகவே செய்தித்தாள்களில் தங்கள் செயல் திட்டங்களை விளம்பரப்படுத்தி வருகிறது. பத்தாண்டுகளாகவே செயல்படுத்திய எண்ணிக்கை பார்க்கையில் மிகக் குறைவாகவே உள்ளது . இலவச சமையல் எரிவாயு திட்டத்தை 2006 ஆம் ஆண்டு திமுக அரசு செயல்படுத்தி வீடு தோறும் சமையல் அடுப்புகள், சிலிண்டர் வழங்கியது. இதேபோல் கலைஞர் காப்பீடு திட்டமும் சிறப்பாக ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் உள்ளது.

மேலும் வீடு தோறும் குடிநீர் இணைப்பு என கூறிக்கொண்டு ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் பதிப்பு மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கடந்த 1970 ஆம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் என அமைக்கப்பட்டு கிராமங்கள் தோறும் குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது என்பதை மறக்கக்கூடாது. தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில் பல்வேறு நல திட்டங்கள் முன்னோடியாக செயல்படுத்தப்பட்டு பிற மாநிலங்களை காட்டிலும் தன்னிறைவு பெற்ற மாநிலமாக செயல்திட்டங்களில் முன்னிலை வைக்கிறது என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் எம்.பி செல்வம் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் , மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் ஜெயக்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News