சங்கராபுரத்தில் திமுக தேர்தல் பிரசாரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.;
Update: 2024-04-15 04:28 GMT
பிரச்சாரம்
சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் மலையரசன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநில மகளிரணி அங்கையற்கண்ணி, ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், ஆறுமுகம், ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், நகர செயலாளர் துரை முன்னிலை வகித்தனர். பரமனத்தம், மேலப்பட்டு, ஊராங்கனி, வரகூர், திம்மனந்தல், ராமராஜபுரம், வடசிறுவளூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஓட்டு சேகரித்த வேட்பாளர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளரை வரவேற்றனர்.