திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு
தென்காசி நாடாளுமன்ற வேட்பாளருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Update: 2024-03-22 06:09 GMT
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் ராணி ஸ்ரீகுமாருக்கு நேற்று மாலையில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் முன்னாள் செயலாளர் செல்லத்துரை உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து திமுக வேட்பாளருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் பகுதி சேர்ந்த திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.