ஜனநாயக கடமையை நிறைவேற்றிய திமுக மாநில நிர்வாகி
தச்சநல்லூரில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக மாநில வர்த்தக அணி செயலாளரும், திருநெல்வேலி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மலை ராஜா தனது வாக்கினை செலுத்தினார்.;
Update: 2024-04-19 02:47 GMT
வாக்கு செலுத்திய மலை ராஜா
மக்களவை பொதுத்தேர்தல் இன்று (ஏப்.19) நடைபெறுகின்றது. இந்த தேர்தலில் இன்று தச்சநல்லூரில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் திருநெல்வேலி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மலை ராஜா தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.இந்த நிகழ்வின்பொழுது அவரது குடும்பத்தினரும் கலந்துகொண்டு ஓட்டு போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.