திமுக மாநில மருத்துவ அணி துணை செயலாளர் வாக்கு சேகரிப்பு..

திமுக மாநில மருத்துவ அணி துணை செயலாளர் வாக்கு சேகரிப்பு..

Update: 2024-04-08 05:33 GMT

திமுக மாநில மருத்துவ அணி துணை செயலாளர் வாக்கு சேகரிப்பு..

நாமக்கல் தொகுதி பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான KRN இராஜேஷ்குமார் MP அவர்களின் அறிவுரைப்படியும், இராசிபுரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் A.K.பாலச்சந்திரன், மற்றும் இராசிபுரம் நகர கழகச் செயலாளர் N.R.சங்கர் ஆகியோர்களின் ஆலோசனைப்படியும் 124 பூத் வி.நகர் ரோடு எண் 1ல் வார்டு செயலாளரும் நகர் மன்ற உறுப்பினருமான செல்வம் தலைமையில் மாநில மருத்துவ அணி துணை செயலாளர் ராஜேஷ்பாபு மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களாண மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சி.மணிகண்டன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் த.தங்கதுரை அவர்களின் மேற்பார்வையில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று தேர்தல் பரப்புரை மற்றும் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தனர். இதில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கழகத்தின் சாதனைகள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதிகளையும் பொதுமக்களுக்கு விளக்கமாக தெரிவித்து வாக்குகள் கேட்டனர்.
Tags:    

Similar News