கோவையில் திமுக முப்பெரும் விழா

கோவை முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும் என கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-06-14 11:49 GMT

கோவை முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும் என கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவை கொடிசியா மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முப்பெரும் விழா நடக்கிறது. மறைந்த முதல்-அமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழிநடத்தி சென்ற முதல்-அமைச்சருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

இக்கூட்டத்தில், கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள், இந்நாள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், வார்டு, கிளை செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியின் துணை அமைப்புகளான அனைத்து அணிகளின் நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கட்சி முன்னோடிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News