பெண்களை ஆபாசமாக பேசிய திமுக ஒன்றிய துணை செயலாளர்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்கரைபட்டியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.;

Update: 2024-06-14 08:42 GMT

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்கரைபட்டியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யவில்லை. இந்த ஊராட்சி மன்ற தலைவராக லட்சுமி என்பவர் இருக்கிறார். துணை தலைவராக இருப்பவர் மலைச்சாமி.

இந்த நிலையில் ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தராததால் கோபமடைந்த பெண்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி கேட்டுள்ளனர். அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் திமுக ஒன்றிய துணை செயலாளருமான சக்திவேல் பெண்களை ஆபாசமாக பேசி உள்ளார்.

Advertisement

அப்போது பெண்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சக்திவேல் சில நபர்களை அழைத்து வந்ததாகவும் பெண்களை அடிப்பதற்காக கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை தூக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அக்கறைபட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி போராடி உள்ளனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News