மீண்டும் தி.மு.க.,வுக்கு கை கொடுக்குமா காஞ்சி?

காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஐந்தில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வசமிருப்பது திமுகவிற்கு சாதகமான சூழலாக உள்ளது;

Update: 2024-03-20 09:18 GMT

திமுக 

செங்கல்பட்டு தொகுதிக்குள் இருந்த காஞ்சிபுரம், கடந்த 2009ல், மறுசீரமைப்புக்கு பின் 'தனி' தொகுதியாக உருவானது. அப்போது, தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்., போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதையடுத்து, 2014ல், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட செல்வம், அ.தி.மு.க., வேட்பாளர் மரகதத்திடம் தோற்றார். 2019ல், தி.மு.க., சார்பில், மீண்டும் செல்வமே போட்டியிட்டார். இதில், மரகதத்தைவிட தோற்கடித்து, கூடுதல் ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.

Advertisement

இந்நிலையில், இந்த லோக்சபா தேர்தலில், காஞ்சிபுரம் தொகுதி, காங்., கட்சிக்கு வழங்கப்படும் என கூறப்பட்டு வந்தது. இதனால், கட்சியினர் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், தி.மு.க.,வே இம்முறையும் காஞ்சிபுரத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தி.மு.க.,வினர் கூறியதாவது: காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள் தி.மு.க.,- வசம். இரண்டு, கூட்டணியான வி.சி.க., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். மதுராந்தகம் மட்டும், அ.தி.மு.க.,-விடம் உள்ளது. மொத்தமுள்ள ஆறு தொகுதிகளில் ஐந்தில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியிடம் இருப்பது, கட்சிக்கு சாதகமான சூழலாக உள்ளது.

Tags:    

Similar News