நடிகை குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்.

மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளை இழிவுபடுத்தி பேசிய பாஜக நிர்வாகி நடிகை குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-17 03:20 GMT
போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 
திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் தமிழக அரசு வழங்கி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை அவதூறாக சித்தரித்து பேசிய குஷ்புவை கண்டித்து முசிறி நகராட்சி தலைவர் கலைச்செல்வி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குஷ்புவின் திருஉருவ படத்தை மகளிர் அணியினர் எரித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் சிவக்குமார், நகர மகளிரணி துணை செயலாளர் ஜமுனா உள்ளிட்ட, ஒன்றிய,நகர திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News