சிறுத்தை நடமாட்டம் குறித்த தவறாக தகவல் பரப்ப வேண்டாம்
சிறுத்தை நடமாட்டம் குறித்த தவறாக தகவல் பரப்ப வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.;
By : King 24x7 Website
Update: 2023-11-01 10:39 GMT
சிறுத்தை
ஈரோடு மாவட்டம் அரச்சலூர், வாய்ப்பாடி ஆகிய கிராமத்தின் அருகியிலுள்ள வனப்பகுதிக்குள்ள சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் தற்போது வேறு பகுதியில் நடமாடிய சிறுத்தையின் பழைய வீடியோ மற்றும் புகைப்படத்தினை தற்போது நடைபெற்றது போல சித்தரித்து பதிவேற்றம் செய்தல் மற்றும் செயலி மூலம் மற்றவர்களுக்கு பகிர்தலால் மக்களுக்கு உண்மை நிலை தெரியாமலும் மற்றும் வளப்பணியாளர்களின் சிறுத்தையை பிடிக்கும் செயல்பாடுகளில் தோய்வு நிலை ஏற்படும் சூழ்நிலை உண்டாக வாய்ப்புள்ளது. எனவே தவறான தகவலை சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்ப வேண்டாம் வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.