வேப்பனப்பள்ளியில் பேருந்து வருமா?: காத்துகொண்டிருக்கும் பேருந்து நிலையம்

வேப்பனப்பள்ளியில் பேருந்து வருமா என காத்து கொண்டிருக்கும் பேருந்து நிலையம்.

Update: 2024-06-06 11:32 GMT
வேப்பனப்பள்ளி பேருந்து நிலையம்

 கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஆனது தமிழகம் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இதனால் வேப்பனப்பள்ளி பகுதிக்கு தினந்தோறும் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிராம மக்கள் வேப்பனப்பள்ளிக்கு வந்து தங்களுடைய தினசரி அன்றாட வேலைகளுக்காவும், மருத்துவமனைக்கும்,

பொருள்களையும் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிய வேப்பனப்பள்ளி நகரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு சுமார் பல கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

ஆனால் தற்போது அந்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் ஏதும் செல்லாததாலும், அடிப்படை வசதிகள் ஏதும் இல்லததால் பயணிகள் பொதுமக்கள் யாரும் செல்லமால் பேருந்து நிலையம் கைவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பேருந்து நிலையம் பக்கம் செல்லாததால் அப்பகுதிகளில் குடிகாரர்களின் கூடாரமாக மாறி உள்ளது மேலும் அப்பகுதியில் கறிவறை வரை குடிநீர் மற்றும் எவ்வித அடிப்படை வசதி இல்லாததால் பேருந்து நிலையம் முழுமையாக கைவிடப்பட்டுள்ளது.

மேலும் பேருந்து நிலையம் வாகன ஓட்டிகளின் நிழல் கூடரமாகவும் மாறி உள்ளது. இதை தொடர்ந்து இரண்டு மாதங்களாக வேப்பனப்பள்ளி பகுதியில் 103 டிகிரியில் வெயில் கொளுத்துகிறது. தினந்தோறும் வேப்பனப்பள்ளிக்கு வந்து பணிகளை முடித்து கொண்டு, நாச்சிகுப்பம், தீர்த்தம், நேர்லகிரி, பேரிகை, பாகலூர், ஓசூர், கேஜிஎப், கோலார், மாலூர், குப்பம், குடிப்பள்ளி, மாதேப்பள்ளி, கிருஷ்ணகிரி, குந்தாரப்பள்ளி பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் பயணிகள் வேப்பனப்பள்ளி சாலையோரமாக நின்று பேருந்துகளுக்கு சென்று வருகின்றனர். பேருந்துகளுக்கு காத்திருக்கும் இந்த பயணிகளுக்கு நிற்க கூட இடம் இல்லமால் கொளுத்து வெயிலில் நிற்க முடியமால் நிழலை தேடி கடைகள் முன்பும்,

மரங்களை தேடியும் அங்கும் இங்கும் அழைந்து திரிந்து வருகின்றனர். இன்னும் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கும் நிலையில் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் சாலை மார்க்கமாகவே செல்லும் பேருந்துகளால் பொதுமக்களும் ஆங்காங்கே உள்ள கடைகளில் முன்பு நின்று பேருந்துகளுக்கு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல வேப்பனப்பள்ளிக்கு வரும் பயணிகளில் சிறு குழந்தைகள், தாய்மார்கள், கர்பணி பெண்கள், நோயாளிகள், கடும் அவதிப்பட்டு வருகின்றனர். நிழல் இல்லமால் அங்குள்ள கடைகளுக்குள் சென்று அமர்ந்து பேருந்துகளுக்கு செல்கின்றனர். மேலும் வேப்பனப்பள்ளி குப்பம் ஜங்ஷனில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிழல் கூடத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் நிழல் கூடத்திற்கு செல்ல முடியாமல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த நிழல் கூடம் வாகனங்களின் நிழல் கூடமாக மாறி உள்ளதால் பயணிகள் உள்ளே சென்று அமர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வேப்பனப்பள்ளி பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் இருப்பதால் பகுதியில் பொதுமக்களுக்கு ஏதுவாக அசோக் மருத்துவமனை எதிரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகளுக்கு தற்காலிகள் நிழல் கூடம் அமைத்து பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தில் எடுக்க வேண்டும் எனவும், இப்பகுதி பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் குப்பம் ஜங்சனில் அமைக்கப்பட்ட நிழல் கூடத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் அந்த வாகனங்களை அப்புறப்படுத்தி ஆகிரமிப்பு கடைகளை அகற்றி பயணிகளுக்கு அமரவும், குடிநீர் வைக்கவும்,

  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். அதோபோல் கிருஷ்ணகிரி மார்கமாக பேருந்து செல்லும் இடத்தில் சாலையோரமாக தற்காலிக நிழல் கூடம் அமைக்க வேண்டும் எனவும் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

பேருந்து நிலையம் இருந்தும் பயனில்லாமல் சாலை மார்க்கமாகவே செல்லும் பேருந்துகளால் இப்பதிகளில் மழை வெயில் என அனைத்து காலங்களிலும் இது போன்று பயணிகள் நிழலை தேடி அலையும் நிலை எப்போது முடிவு எட்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வளர்கள் விழி மீது விழி வைத்து காத்து கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News