நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நாய்கள் தொல்லை 

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2024-05-10 12:23 GMT
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபாதையில் நாய்கள்

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அண்ணா  வளையாட்டு அரங்கம் உள்ளது. தற்போது கோடைகால பயிற்சி நடைபெறுகிறது நூற்றுகணக்கான சிறுவர் சிறுமியர் பயிற்சி மேற்கொள்கிறார்கள்.      விளையாட்டு அரங்கு ஓடு பாதையிலும்,  பிற பயிற்சி தளங்களில் வெறிநாய் மற்றும் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி வருகின்றன.

இது குறித்து பலமுறை விளையாட்டு வீரர்கள் புகார் அளித்தும் நாய்கள் விளையாட்டு அரங்குக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.         சிறுவர் சிறுமிகளுக்கு நாய்களால் ஆபத்து ஏற்படாமல் இருக்க மைதானத்தை கண்காணித்து நாய்களை துரத்த நடவடிக்கை எடுக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு அரங்கநல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கூறுகையில் -     அண்ணா விளையாட்டு அரங்கத்திற்குள் வரும் நாய்களை துரத்த குறியீட்டாளரோ ஊழியர்களோ முன் வருவதில்லை. அவர்கள் விளையாட்டு அரங்க வாயிலில் அமர்ந்து நுழைவு கட்டணத்தை வசூல் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.

மைதானத்தை கண்காணிப்பதில்லை. சமீபத்தில் சென்னை பூங்காவில் வளர்ப்பு நாய் சிறுமியை கடித்தது குதறிய நிலை இங்கும் வரக்கூடாது.      அதுபோல நாய் கடித்து யாராவது பாதிக்கப்பட்டால் தான் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.

ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விளையாட்டு அரங்கத்தில் உள்ள நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். என்றனர்.

Tags:    

Similar News