தம்மம்பட்டி அருகே வடிகால் அமைக்கும் பணி தொடங்கியது
Update: 2023-12-16 04:56 GMT
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம் பட்டி அருகில் உலிபுரம் ஊராட்சி மூக்காகவுண்டன்புதூர், நரிக்கரடு ஆகிய பகுதிகளுக்கு வடிகால் அமைக்கும் பணி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து ₹10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை கெங்கவல்லி அதிமுக எம்எல்ஏ நல்லதம்பி தலைமையில் பூமிபூஜை பணிகள் துவக்கி வைத்தார். இதில் மூக்காகவுண்டன்புதூர் வடிகால் அமைக்கும் பணிக்கு ₹6 லட்சமும், நரிகரடு பகுதியில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு ₹4 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கெங்கவல்லி மாவட்ட கவுன்சிலர் ராஜா, பிரதிநிதி முத்துலிங்கம், முருகேசன், ஆறுமுகம், ஸ்ரீகுமரன், ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.