கொடுவாயில் குடிநீர் தட்டுப்பாடு - 300க்கும் மேற்பட்டோர் சாலைமறியல்

கொடுவாய் அருகே எல்லப்பாளையம், சாய்ராம் நகர் பகுதியில் குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து அப்பகுதி மக்கள் தாராபுரம்- அவினாசிபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-23 07:00 GMT

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த கொடுவாய், எல்லப்பாளையம் ஊராட்சி பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக எல்லப்பாளையம்  ஊராட்சிக்கு உட்பட்ட சாய்ராம் நகர் பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி செய்து தரப்பட்டவில்லை என நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் தாராபுரம் அவினாசி சாலையில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அப்பகுதியில் போலிசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் தெரிவிப்பதாவது: ஒவ்வொரு‌ பகுதிக்கும் சுமார் 10 நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்பட்ட குடிநீர் தற்போது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் கடந்தும் விநியோகிக்கப்படவில்லை என்றும், குடிநீர் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் ஒன்று இவை முறையாக இப்பகுதி மக்களுக்கு கிடைப்பதில்லை என்றும் இப்பிரச்சினை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை இது வரை எடுக்கப்படவில்லை என்றும், கோடைகாலம் துவங்கிய நிலையில் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகின்றனர்.

எனவே குடிநீர் வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து குடியிருப்புகளுக்கும் முறையாக குடிநீர் விநியோகிக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய பொதுமக்கள் மற்றும் வீட்டிலுள்ள பெண்கள் பல கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். வசதியுள்ள பொதுமக்கள் பணத்திற்கு லாரியில் குடிநீர் வாங்கி வீட்டிற்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் ஏழை எளிய‌ மக்கள் வெகு தூரம் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வீட்டிலுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இது சம்பந்தப்பட்ட துறைக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே எங்களின் அடிப்படை வசதியான குடிநீர் வசதிகள் அரசு செய்து தரும்படி நாங்கள் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு கூறினர்.  எனவே இப்பகுதியில்  போலிசார் குவிக்கப்பட்டனர்.

இதனை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலிசார் இப்பிரச்சினைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்‌ எனவே உடனடியாக இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை கூறியதன் பேரில் பொதுமக்கள் உடன்படிக்கை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.  மேலும் இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தண்ணீர் தட்டுபாட்டை தீர்க்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News