தற்காலிக பேருந்து நிலையத்தில் குடிநீர் தொட்டி அமைப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரியில் தற்காலிக பேருந்து நிலையத்தில் பொதுநல அமைப்புகள் சார்பாக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.

Update: 2024-03-06 01:05 GMT

பொதுநல அமைப்புகளின் சார்பில் பயனர்களுக்கு குடிநீர் வழங்கல்

சேலம் மாவட்டம், சங்ககிரியில் கடந்த இரு வாரமாக வெயில் அதிகரித்து வரும் நிலையில் கோடைகாலத்திற்கு முன் கூட்டிய பொதுநல அமைப்புகளின் சார்பில் சங்ககிரி தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சங்ககிரி தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை, பசுமை சங்ககிரி, ஓம் ராம் யோகா அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு குடிநீருக்காக குடிநீர் தொட்டி அமைத்தனர்.

பொது மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை பேரூராட்சி செயல் அலுவலர் ஜி.உஷா, சங்ககிரி அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார், தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை தலைவரும், பேரூராட்சி உறுப்பினருமான சண்முகம், ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, நிர்வாகிகள் செந்தில்குமார், கிஷோர்பாபு, கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார், வேல்முருகன், சதீஸ்குமார், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம்பழனிசாமி, பசுமை சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகி எ.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இதில் கலலந்து கொண்டனர்.

Tags:    

Similar News