பழங்குடியினருக்கு ஓட்டுநர் பயிற்சி
ஆசனூர் வனக்கோட்டத்தில் பட்டியல் பழங்குடி இளைஞர்களுக்கான ஓட்டுநர் பயிற்சி முகாமிைனை நீலகிரி எம்.பி ஆ.இராசா துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டத்தில் பட்டியல் பழங்குடி இளைஞர்களுக்கான ஓட்டுநர் பயிற்சி முகாமினை நீலகிரி M.P .ஆ.இராசா துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நீலகிரி M.P ராசா , காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் 12 மலைவாழ் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு சூழல் மேம்பாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் உள்ள பட்டியல் பழங்குடி இளைஞர்கள் 60 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு ஓட்டுநர் பயிற்சி வழங்கும் முகாம் ஆசனூர் வனக்கோட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பட்டியல் பழங்குடி மக்கள் பல்லாண்டு காலமாக காட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எனவே அந்தந்த வனப்பகுதியிலேயே உங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். இப்பயிற்சியில் கலந்து கொண்டு ஓட்டுநர் உரிமம் பெறும் பட்டியல் பழங்குடி இளைஞர்களுக்கு வனத்துறையிலேயே வேலை வாய்ப்பை வழங்குவதற்கு அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்றார்.அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தகுதியுள்ள பட்டியல் பழங்குடி இளைஞர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்று பயனடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்