நாகை மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி
நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பாக போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
உலகம் முழுவதும் மனித குல சமூகத்தை சீரழித்து வரும் போதை பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகை மாவட்ட காவல்துறையினரால் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரித்திடலில் விழிப்புணர்வு பேரணி ஏற்படுத்தப்பட்டது.
சிறப்புடன் நடைபெற்ற இப்பேரணியை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் கொடி அசைத்து துவங்கி வைத்தார்கள், மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் பதித்த 200க்கும் மேற்பட்ட டி-ஷர்ட்டுகளை பொதுமக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்கள்,
மேலும் இப்பேரணியானது நாகை அவுரி திடலில் துவங்கி, நகை நகராட்சியில் முடிக்கப்பட்டது, மேலும் நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர்,ஊர் காவல் படையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.