காவல்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு
காரப்பட்டு அரசு பள்ளியில் காவல்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-02-21 06:50 GMT
காரப்பட்டு அரசு பள்ளியில் காவல்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில்,மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவலிங்கம் உத்தரவின்பேரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் மஞ்சுளா தலைமை வகித்து. பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் காவல் உதவி ஆய்வாளர் சிற்றரசு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் சிவகாமி, செண்பகவள்ளி, காவலர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி பருவத்தில் மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையானால் தங்கள் வாழ்க்கையே கேள்வி குறியாகிவிடும், ஆகையால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இறுதியாக பள்ளி தலைமை ஆசிரியர் ஞானப்பண்டிதன் நன்றி கூறினார்.