குடிபோதையில் தந்தை, அக்காவை தாக்கியவர் கைது

ஊதியூர் அருகே குடிபோதையில் தந்தை மற்றும் அக்காவை தாக்கியவரை ஊதியூர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்;

Update: 2024-04-29 06:19 GMT

காவல் நிலையம் 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஊதியூர் பகுதிக்குட்பட்ட செட்டிபாளையம் ஏட்டுக்காட்டுத் தோட்டத்து பகுதியை சேர்ந்தவர் தங்கராசு வயது 63. இவர் தேங்காய்‌ பருப்பு உடைக்கும் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மூத்த மகள் பூங்கொடி வயது 45. திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இளைய‌ மகன் சேகர் வயது 39. இவருக்கும் திருமணமாகி‌ ஒரு‌ குழந்தை உள்ளது. சேகர் மரம் ஏறும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. 

Advertisement

இந்த நிலையில் சேகருக்கு குடி பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக போதையில் வீட்டிற்கு வந்து தந்தை மற்றும் அக்கா வீட்டில் அடிக்கடி தகராறு செய்தவந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு அக்கா பூங்கொடியின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த தந்தை தங்கராசு மற்றும் அக்கா பூங்கொடியுடன் செலவிற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.  அப்போது வாய் வார்த்தை முற்றிபோக அடிதடியாக மாறிய சண்டையில் சேகர் அவரது தந்தை தங்கராசையும் உடன் இருந்த அக்கா‌ பூங்கொடியையும் அடித்து கீழே தள்ளிவிட்டு  தகாத வார்த்தையில் திட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனை அடுத்து பூங்கொடி ஊதியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து ஊதியூர் போலிசார் நேற்று சேகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தாராபுரம் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News