போதை ஆசாமி ஓட்டிய கார் மோதி பால் வியாபாரி படுகாயம்

குளச்சலில் மது போதையில் ஒட்டி வந்த கார் மோதி பால் வியாபாரி காயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-06-28 06:44 GMT

பைல் படம் 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கீழ்கரையை சேர்ந்தவர் சுபாஷ் (40). பைக்கில் பால் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று  இவர் சாத்தான்கரை பகுதியில் பால் விற்பனை  செய்து கொண்டிருந்தார். அப்போது திக்கணங்கோடு பகுதியில் இருந்து குளச்சல் நோக்கி சென்ற கார் திடீரென தலை தடுமாறி  சுபாஷ் மீது மோதியது. இதில் சுபாஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.        இந்த சம்பவத்தில் அவரது பைக் சேதமடைந்தடன், பால் கேனும் சேதம் அடைந்தது. அதில் இந்த 40 லிட்டர் பால் கொட்டி நாசமானது. அக்கம் பக்கத்தினர் சுபாஷை மீட்டு குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிட்சைக்காக  கேரளா பகுதி நெய்யாற்றின் கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலிசார் வழக்கு பதிவு செய்து கர் ஒட்டி வந்த மண்டைக்காடு பகுதியை சேர்ந்த அருள் (47) என்பவர் மீது மது போதையில் கார் ஓட்டி வந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News