ஓட்டன்சத்திரம் பகுதியில் வறண்ட குளங்கள்
ஓட்டன்சத்திரம் பகுதியில் நிரம்பாத அணைகளால் குளங்கள் அனைத்தும் வறண்டன.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-04 09:46 GMT
வறண்டுள்ள அணை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் அணைகள், குளங்களுக்கு நீர்வரத்து ஏற்படுவது உண்டு.கனமழை பெய்யும் போது வெள்ளம் குளங்களுக்கு வந்து சேரும். இப்பகுதியில் கனமழை பெய்யாததால் காற்றாற்று வெள்ளம் குளங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படவில்லை.
இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பினால் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும். நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.