ஸ்ரீ வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் டிடிவி தினகரன் சாமி தரிசனம் !
தேனியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் டிடிவி தினகரன் சாமி தரிசனம் செய்தார்.
தேனியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் டிடிவி தினகரன் சாமி தரிசனம் நாளை வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் இன்று கௌமாரியம்மன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
தேனி மாவட்டம் தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முக்கோண வடிவிலான கொடிக்கம்பம் முல்லைப் பெரியாற்றிலிருந்து ஊர்வலமாக எடுத்து வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் கம்பம் நடப்பட்டு கம்பம் நடுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலையில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொண்டார் பின்னர் கொடிக்கம்பத்திற்கு முல்லைப் பெரியாறு ஆற்று நீர் ஊற்றி சிறப்பு வழிபாடு செய்தார்.
நாளை முதல் கட்டமாக தமிழக முழுவதும் வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் டிடிவி தினகரன் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலை சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார் அவருடன் அமமுக கட்சியின் தேனி மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமான உடன் வந்திருந்தனர்.