கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வேண்டுகோள்

இந்திய நாட்டு மாணவ, மாணவியர்களின் கல்வி கனவு பாதுகாக்கப்பட இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கேட்டுக்கொண்டார்.

Update: 2024-04-17 09:04 GMT

இந்திய நாட்டு மாணவ, மாணவியர்களின் கல்வி கனவு பாதுகாக்கப்பட இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கேட்டுக்கொண்டார்.


செவ்வாயன்று திண்டுக்கல் பிரஸ் கிளப்பில் பொது பள்ளிக்களுக்கான மாநில மேடை சார்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில் ; ஓன்றிய அரசு நடத்துகிற கேந்திரிய வித்யாலாயா மற்றும் நவோதயா பள்ளிகளில் கற்றல் வாய்ப்பை அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் உருவாக்காமல் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்று தனித்தகுதி தந்து அவற்றை ஆகச்சிறந்த பள்ளிகள் ஆக்குவது. மற்ற கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் சாதாரண பள்ளிகளாக்குவது என்று பாஜக செயல்படுத்தி வருகிறது. அதே சமயத்தில் ஒன்றிய பாஜக அரசு சமூக நீதி அடிப்படையில் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும் வாய்ப்பை உருவாக்கி வைத்திருக்கும் மாநிலங்களை மிரட்டி பாகுபாட்டுடன் நடத்திட பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தை ஏற்றுக்கொள்ள வற்புறுத்துகிறது ஒன்றிய பாஜக அரசு. இனி மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பள்ளிகளை உருவாக்குவதும், சமமான கற்ற வாய்ப்பை உருவாக்குதும் என்பது சாத்தியமற்ற ஒன்றாக ஆகும் என்று கூறினார்.
Tags:    

Similar News