வெயிலின் தாக்கம் காரணமாக பதநீர் நுங்கு விற்பனை அமோகம்

கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பதநீர் நுங்கு விற்பனை அதிக அளவில் நடைப்பெற்று வருகிறது

Update: 2024-04-25 15:12 GMT

நுங்கு விற்பனை அமோகம்

தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வழக்கமாக வெப்பம் 100 டிகிரிக்கு மேல் அடிப்பதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பிற்பகல் நேரங்களில் சாலைகளில் பொது மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார் புரம் பகுதியில் உள்ள பனை மரங்களில் பதநீர் இறக்கும் சீசன் துவங்கி உள்ளது. இந்த பதநீர் விற்பனை சீசன் கோடை காலமான ஏப்ரல், மே , ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே இருக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்தக்கூடிய பானமாக பதநீர் உள்ளது.

இதன் காரணமாக தூத்துக்குடி மாநகரில் பதநீர் விற்பனை சூடு பிடித்துள்ளது. உடல் உஷ்ணத்தை தணிக்கும் பதநீர் மற்றும் நுங்கை பொதுமக்கள் வாங்கி அருந்தி வருகின்றனர். இந்த பதநீர் மற்றும் நுங்கில் கால்சியம் ,மெக்னீசியம் உள்ளிட்ட தாது பொருட்கள் அடங்கியுள்ளதால் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன் உடல் சூட்டை தணிக்கிறது மேலும் வயிற்றுப்புண் ஆகியவற்றால் ஏற்படும் பிரச்சனைகள் தீர்க்க ஒரு மருந்தாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News