அரசுப் பள்ளியில் இ பொது சேவை மையம் முகாம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல்படி அரசு பள்ளியில் சிறப்பு இ பொது சேவை முகாம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் எதிர்வரும் கல்வியாண்டில், மாணவ ,மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்கள் கல்வி பெரும் பள்ளிகளிலே, வருமான வரி, இருப்பிட சாதி மற்றும் முதல் பட்டதாரி சான்றுகளை விண்ணப்பிக்க ஏதுவாக , சிறப்பு இ சேவை மையம் முகாம் அமைக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அவர்களின் அறிவுறுத்தல் படி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் அமைந்துள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இ பொது சேவை முகாம் நடைபெற்றது.
இதில் படிப்புச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ் பதிவு செய்வதற்காக பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவியர் தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர். பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த இ-சேவை மையம் முகாமில் பங்கேற்று தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற படிவங்களை வழங்கி விண்ணப்பித்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளிபாளையம் CSC இ பொது சேவை மையம் சதீஸ்ராஜ் செய்திருந்தார்.