கோவிலூரில் ஈஸ்டர் திருவிழா சிறப்பு திருப்பலி
200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலூர் புனித சவேரியார் திருத்தளத்தில் ஈஸ்டர் திருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் கொடியேற்ற நிகழ்வு ஏராளமானோர் பங்கேற்றனர்.
Update: 2024-03-31 12:03 GMT
இன்று உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த பெருவிழாவான ஈஸ்டர் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் இந்த நிலையில்,தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயம் அமைந்துள்ளது.
இன்று காலை 8.30 மணிக்கு பங்குத்தந்தை ஆரோக்கியசாமி மற்றும் உதவி பங்கு தந்தை லிபின் ஆரோக்கியம் சிறப்பு விருந்தினராக தர்மபுரி மறை மாவட்டத்தின் முதன்மை குரு அருள்ராஜ் கலந்துகொண்டு கூட்டு பாடற் திருப்பலி நடைபெற்றது. அதன் பின்பு பாஸ்க்கு திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வு மேல தளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.