துறையூர் அருகே மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மின் ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-01-07 12:35 GMT

மின் வாரிய ஊழியர் தற்கொலை

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த முசிறி தாலுகா பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வேந்திரன் (41). திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள மின்வாரியத்தில் மின் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி பிரியா வாத்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து புலி வலம் பகுதியில் உள்ள வன பகுதியில் உள்ள மரத்தில் ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக புலிவலம் காவல்துறையினருக்கு தகவல் வந்தது.  சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் , முசிறி அருகே காணாமல் போன செல்வேந்திரன் என்பது  தெரியவந்தது. இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர் துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News