எடப்பாடி : சாலை பணியாளர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-11 02:46 GMT

ஆர்ப்பாட்டம் 

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக்கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலன்களை வழங்க வேண்டும், சாலைப்பராமரிப்பு பணியிடங்கள் காலியாக உள்ள பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களை சாலை பணியாளர்களாக பணி வழங்கி வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும், சாலைப்பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி தரக் கோரியும், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு சாலைப்பணியாளர்கள் கருப்புக்கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை பணியாளர்கள் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News