நெல்லையப்பர் கோவிலில் கல்வி கற்றல் நிகழ்ச்சி

நெல்லையப்பர் கோவிலில் கல்வி கற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-10-24 10:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விஜயதசமியான இன்றைய தினம் நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.நெல்லையப்பர் திருக்கோவில் ஆறுமுக நயினார் சன்னதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டு கற்றல் நிகழ்ச்சியை தொடங்கினர்.

புதிதாக கல்வி கற்கும் குழந்தைகள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியுடன் கோவிலுக்கு வருகை தந்து ஆறுமுக நயனார் சன்னதியில் நடைபெற்ற கூட்டு வழிபாட்டில் பங்கேற்றனர் தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை செய்து பச்சரிசியில் விரலி மஞ்சள் கொண்டு ஹரி ஓம் என எழுதியும் உயார் எழுத்தின் முதல் எழுத்தான 'அ' எழுதிய தங்களது கல்வி கற்றலை தொடங்கினர்.

நெல்லையப்பர் திருக்கோவில் உழவர் பணி கமிட்டி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கல்வி கற்றலை தொடங்கினர். இதே போல் நெல்லை டவுன் பகுதியில் உள்ள சரஸ்வதி அம்மன் திருக்கோவில் மற்றும் நெல்லை நகர் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி மூலம் குழந்தைகள் கல்வி கற்றலை தொடங்கினர்.

Tags:    

Similar News