நாகையில் கல்வி கடன் முகாம்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கல்வி கடன் முகாமில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ், கல்வி கடன்களை வழங்கினார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கல்வி கடன் முகாமில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ், கல்வி கடன்களை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி அவர்கள் கலந்துகொண்டார்.
நிகழ்சியில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசுகையில் மாணவர்கள் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்ய இந்த கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். முதுகலை கல்வி பயில்வோருக்கு இளங்கலை பட்டய சான்றிதழ் அல்லது ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் இருக்க வேண்டும்.
ஏழரை லட்சத்திற்கு மேல் கல்விக்கடன் விண்ணப்பிப்பவர்கள் சொத்து பிணை பத்திரம் மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கூறிய ஆவணங்களை மாணவ மாணவிகள் தயார் செய்த பின் வித்யாலட்சுமி இணைய முகப்பில் பொதுவான கல்விக் கடன் விண்ணப்பப் படிவம் மூலம் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
உங்கள் விண்ணப்பத்தின் மென்நகல் சம்பந்தப்பட்ட வங்கிக்கு இணைய வாயிலாக சென்றடையும். நமது மாவட்டத்திற்கான இலக்கு 2000 மாணவர்களுக்கு இந்த ஆண்டு கல்வி கடன் வங்கிகள் வழங்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியியல் ஆண்டில் மட்டும் நாகப்படட்டினம் மாவட்டத்தில் சுமார் 420 மாணவர்களுக்கு ரூ.9.25 கோடி அளவில் கல்வி கடன்கள் வழங்கப்பட்டு உள்ளது.
கடன் பெற விரும்பும் கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் முன்னோடி வங்கிகளின் மாவட்ட மேலாளர் செந்தில் குமார், தனித்துணை ஆட்சியர்கோ.அரங்கநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.